ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே யுபிஎஸ்சி நேர்முக தேர்வு ! - சிவில் சர்வீசஸ் தேர்வு

டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் சேவைகள் முழுமையாக செயல்படாததால், டெல்லியில் நடைபெறும்  யு.பி.எஸ்.சி நேர்முக தேர்விற்கு வரும் தேர்வாளர்களின் விமான கட்டணத்தை வழங்க தேர்வாணையம் முடிவுசெய்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே யுபிஎஸ்சி நேர்முக தேர்வு !

author img

By

Published : Jul 21, 2020, 4:23 AM IST

தேர்வாளர்களின் தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கு தேர்வாணையம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜுலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தபோது, யுபிஎஸ்சி, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் 2019-க்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தி வந்தது. அப்போது, இரண்டாயிரத்து 304 தேர்வர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட வேண்டியிருந்தது.

அன்றைய சூழலை கருத்தில்கொண்டு, தேர்வாணையம் 623 பேருக்கான நேர்முகத் தேர்வை ஒத்திவைத்தது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுவரும் சூழலில், மீதமுள்ள தேர்வர்களுக்கு ஜூலை 20 முதல் 30 வரை நேர்முக தேர்வை நடத்த ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக அனைத்து தேர்வர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள், ஆலோசகர்கள்,தேர்வாணையத்தின் பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில்கொண்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து அறைகள், அரங்குகள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து சுத்திகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஆளுமை சோதனை அல்லது நேர்காணல், இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய போலீஸ் சேவை (ஐபிஎஸ்) உள்ளிட்டவைகள் அடங்கும்.

தேர்வாளர்களுக்கு தகுந்த இடைவெளியுடனான இருக்கை ஏற்பாடுகள், நேர்முகத் தேர்வில் தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறை / வழிகாட்டுதல்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.