ETV Bharat / bharat

'இரண்டரை லட்சம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை... ' : கூகுள் பே-வின் ஜூன் மாத சாதனை! - இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன்

டெல்லி: எப்போதும் இல்லாத அளவிற்கு ஜூன் மாதத்தில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

'34 பில்லியன் பரிவர்த்தனை...இரண்டரை லட்சம் கோடி..' கூகுள் பே ஜூன் மாத சாதனை!

author img

By

Published : Jul 3, 2020, 2:55 AM IST

இந்தியாவில் பல கோடி பேர் தினசரி பயன்படுத்தப்படும் செயலியாக கூகுள் பே உள்ளது. 5 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை கூகுள் பே செயலியில் மக்கள் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். இந்த செயலியின் பயன்பாடு, லாக்டவுன் காலத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தொற்று பணத்தின் மூலமாகவும் பரவும் என்ற தகவல் வெளியானதையடுத்து, பெரும்பாலானோர் டிஜிட்டல் பேமென்ட் பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் கூகுள் பே பணம் பரிவர்த்தனையில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் மாதத்தில் யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI - Unified Payments Interface)

கொடுப்பனவுகள் மூலம் எப்போதும் இல்லாத அளவுக்கு 34 பில்லியன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் எனக் கணக்கிட்டுள்ளனர். மே மாதத்தில் 1.23 பில்லியனிலிருந்து 8.94 விழுக்காடு வளர்ச்சியை இம்மாதத்தில் கூகுள் பே பதிவு செய்துள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின், ஏப்ரல் மாதத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையும், மே மாதத்தில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனையும் நடைபெற்றுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மக்களுக்குப் பாதுகாப்பான சேவைகளை விரைவாக வழங்கும் விரைவில் UPI 2.0 என்ற வெர்ஷன் வெளியிட NPCI திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.