ETV Bharat / bharat

ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை திட்டமிட்டு கொலை செய்த பெண்!

author img

By

Published : Dec 12, 2020, 5:02 PM IST

லக்னோ: அலிகார் மாவட்டத்தில் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியவரை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது சகோதரர் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Uttar Pradesh
Uttar Pradesh

உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தூய்மைப் பணியாளர் தீப்பு காந்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யசோதா தேவி என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்துவந்துள்ளது.

யசோதா தேவியை ஆபாசமாக வீடியோ எடுத்து தீப்பு காந்தி பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான யசோதா நடந்தவற்றை சகோதரர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் தீப்பு காந்தியை திட்டமிட்டு, டிசம்பர் மூன்றாம் தேதி கொலை செய்தனர். இதற்கிடையில் தீப்பு காந்தி காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் டிசம்பர் 10ஆம் தேதி அவரது உடல், நுல்லா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், யசோதாவையும் அவரது சகோதரர் ராஜ்குமாரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.