குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் பிப்ரவரி 23ஆம் தேதி தலைநகர் டெல்லியில் கலவரம் வெடித்தது. மூன்று நாட்கள் தொடர்ந்த இந்தக் கலவரத்தில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இக்கலவரம் குறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, உத்தரப் பிரதேசத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் டெல்லி வந்து இந்தக் கலவரத்தை நிகழ்த்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட கும்பலை உத்தரப் பிரதேச காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வழிப்பறிக் கொள்ளை வழக்கில் கும்பலுடன் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனா அச்சம்: பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய கட்டுப்பாடு