ETV Bharat / bharat

தீண்டாமை பார்க்கும் முடிவெட்டும் கடைகள்! - Tamil latest news

பெங்களூரு: பட்டியலின மக்களைக் கண்டால் முடி வெட்டும் கடை முதலாளிகள் உடனே கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று விடும் அவலம் கர்நாடகாவில் நிகழ்ந்து வருகிறது.

முடிவெட்டும் கடைகள்
முடிவெட்டும் கடைகள்
author img

By

Published : May 20, 2020, 12:16 AM IST

பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்காகப் போராடியுள்ளனர். தற்போது 21ஆம் நூற்றாண்டு நடந்துவரும் நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த போதிலும் இந்தச் சாதி ஒழிந்தபாடில்லை.

இந்தகாலத்திலும் சில பழமையான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு அருகில் இருக்கும் மாவட்டமான ராமநகரா பகுதியில் தீண்டாமை இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் ராமநகரா மாவட்ட நஞ்சபுரா எனும் கிராமத்தில் இருக்கும் முடி திருத்தும் கடைகளில் பட்டியலின மக்களுக்கு அனுமதி கிடையாது. இது தெரியாமல், சில பட்டியலின மக்கள் கடைகளுக்குச் சென்றால், அக்கடையை மூடிவிட்டுச் செல்கின்றனர், கடை உரிமையாளர்கள்.

இதேபோன்று பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திடீரென ஒன்றாகக் கூடி முடிவெட்டுவதற்காக கடைக்குச் சென்றுள்ளனர். உடனே, முடிதிருத்தகத்தில் முதலாளி கண் இமைக்கும் நேரத்தில் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளார்.

இச்சமூகத்திலிருந்து சாதியையும், மக்களிடமிருந்து தீண்டாமையையும் ஒழிக்க அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும், எங்களை மாற்றுவது கடினம் என்று சிலர் இதுபோன்ற செயல்களால் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையின் உச்சம்!

இதையும் படிங்க: மாநில எல்லைகளுக்கு நடுவே நடந்த திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.