கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில், இதில் ஏழு காங்கிரஸ் அதிருப்பதி எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இந்த அதிருப்தி எம்எல்ஏக்களை சரிகட்டும் விதமாக காங்கிரஸ் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் ஏழு அதிருப்பதி எம்எல்ஏக்களில் ஒருவரான உமேஷ் யாதவ் என்பவரிடம் இருந்து வேர்ஹவுஸ் கார்பரேஷன் தலைவர் பதவியை அதிரடியாக பறித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. அவருக்கு பதிலாக பிரதாப் கௌடா படீல் என்பவர் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.