உன்னாவ் நகரில் கடந்த மார்ச் மாதம் 23 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு ரேபரேலியிலுள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இரண்டு பேர் பிணையில் பத்து நாள்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றம் சென்றபோது, பிணையில் வந்த இருவர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர். இதையடுத்து 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் காவல் துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியின் சகோதாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பாலியல் வன்புணர்வு வழக்கில் எனது சகோதரர் சுபம், தந்தை ஹரி சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அரசியல் தலையீடு இருக்கிறது. ஏனென்றால், எனது தாய் குண்டன்பூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பதால், எங்களது குடும்பத்தை குறிவைத்து இதுபோன்ற போலி வழக்குகளில் கைது செய்துள்ளனர். எனது சகோதரரும் தந்தையும் நிரபராதிகள் என நிரூபிக்க, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உன்னாவ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராட்டம்!