குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பேரணியில் பேசிய நரேந்திர மோடி, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய திருநாட்டின் சிறப்பு எனக் கூறினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி மாநில பாஜக பிரமுகர் மனோஜ் திவாரி வரவேற்றார். இந்தப் பேரணியில் கட்சியின் மூத்தத் தலைவர்கள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுதம் கம்பீர், மீனாட்சி லேகி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், ஹர்ஷவர்தன், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியில் பிரதமரின் பேச்சைக் கேட்க பெருந்திரள் கூட்டம் கூடியது. மக்கள் வெள்ளத்தில் பேசிய மோடி, டெல்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வாழ்க்கை நடத்திய 40 லட்சம் பேருக்கு குடியுரிமை கிடைக்க வழிவகை கிடைத்துள்ளது என்று கூறினார்.
மேலும் பாஜக தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அவர்கள்' அகதிகள் அல்ல: சொல்கிறார் நிதின் கட்கரி!