சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) நாடெங்கும் கொண்டாடப்படும் நிலையில், பல அரசியல் தலைவர்கள் யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்துவருகின்றனர்.
நாட்டு பிரதமர் முதல் சராசரி குடிமகன் வரை யோகாசனத்தின் பலன் குறித்தும், அதனால் உடலுக்கும் கிடைக்கும் நன்மை குறித்தும் எடுத்துரைத்துவரும் நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி யோகாசனம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முக்தர் அபாஸ் நக்வி தனது இல்லத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களோடு யோகாசனம் செய்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க... வீட்டிலேயே யோகா செய்யுங்கள்: ஆளுநர் வேண்டுகோள்!