இது தொடர்பாக இங்கிலாந்து தூதுவர் ஜான் தாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், " கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆனால், பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து நாட்டினரை திரும்ப அழைத்து வர இங்கிலாந்து அரசு விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. இதனால் இங்கிலாந்து நாட்டினர் தங்கள் பாஸ்போர்ட், பயண ஆவணங்களுடன் புறப்படத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவிலிருந்து விமானம் புறப்படும் நேரம், இடம் குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். "நீங்கள் இங்கிலாந்திற்கு திரும்பி வர இதுவரை தூதரகத்தை தொடர்பு கொள்ளவில்லை என்றால் Newdeldhi@fco.gov.uk என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப், இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இங்கிலாந்திற்கு அழைத்து வர இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிரதமர் நிவாரண நிதிக்கு 150 கோடி ரூபாய் அளிக்கும் எல்&டி நிறுவனம்!