மகாராஷ்டிராவில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைந்தபோதிலும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10,000 பேர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கிடையே, கரோனா கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்காததை விமர்சித்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா என ஆளுநர் கேள்வி எழுப்பியதற்கு, மற்றவர்களிடம் இந்துத்துவா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை என உத்தவ் பதிலளித்துள்ளார். முன்னதாக, ஆளுநர் எழுதிய கடிதத்தில், "இந்துத்துவ கொள்கையை ஆதரிக்கும் நீங்கள், முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து அயோத்திக்கு சென்று ராமரை வழிபாடு செய்தீர்கள். ஏகாதசி அன்று, பந்தர்பூரில் உள்ள விட்டல் ருக்மணி கோயிலுக்கு சென்று பூஜையில் ஈடுபட்டீர்கள்.
ஆனால், தற்போது நீங்கள் வழிபாட்டு தலங்களை திறக்காமல் ஒத்திவைத்துவருவதை நினைத்தால் எனக்கு சந்தேகம் எழுகிறது. வாழ்நாளில் நீங்கள் மிகவும் வெறுத்த மதச்சார்பற்றவராக, நீங்களே மாறிவிட்டீர்களா?, ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே பல இடங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுவிட்டது. உணவகங்கள், கடற்கரை, பார்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், கடவுள்களுக்கு ஊரடங்கு விதிப்பது கண்டிக்கத்தக்கது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உ.பி.,யில் பட்டியலின முதியவரை சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தல்!