ETV Bharat / bharat

பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு இலவச பயணம் - ஊபர் அறிவிப்பு!

டெல்லியில் உள்ள  பிளாஸ்மா தான வங்கியில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு இலவச பயணம் வழங்குவோம் என ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Uber to provide donors free transport to plasma bank

author img

By

Published : Jul 8, 2020, 10:44 PM IST

இது தொடர்பாக ஊபர் இந்தியா தெற்காசிய இயக்குநர் பிரப்ஜீத் சிங் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் வரும் நாட்களில் பிளாஸ்மா வங்கியில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு இலவசமாக பயணங்களை வழங்க ஊபர் முடிவு செய்துள்ளது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவித் தொடங்கியதிலிருந்து அரசாங்கத்திற்கு உதவ ஊபர் நிறுவனம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவசர சிகிச்சைக்காக சுகாதார ஊழியர்களை கொண்டு செல்ல டெல்லி அரசுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் இலவச சேவை வழங்கியது.

டெல்லியில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மாவை தானமாக பெற இன்ஸ்டியூட் ஆப் லிவர் & பிலியரி சயின்ஸ், பிளாஸ்மா வங்கியாக மாற்றப்பட்டது. நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியான இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் இரண்டாம் தேதி திறந்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.