சென்ற 15ஆம் தேதி வோடஃபோன், ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் ஜூலை- செப்டம்பர் வரையிலான நிதிநிலை அறிக்கைகள் வெளியானது. இதில் அந்நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
வோடஃபோன்-ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.23,045 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.30,142 கோடி இழப்பில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்தமாக தொலைபேசி நிறுவனங்களின் இழப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.
இந்த நிலையில் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு, கடன் நிலுவைத் தொகையை வழங்க மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய தொலைபேசி இயக்குனர்கள் சங்க (Cellular Operators Association of India (COAI)) பொது இயக்குனர் ராஜன் மேத்யூஸ் (Rajan Mathews) கூறினார்.
மேலும் நெருக்கடியை சமாளிக்கும் தற்காலிக முயற்சியாக, தொலைபேசி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். முதல்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரும் மார்ச் மாதத்திற்குள் தனியார் கையில் இருபெரும் பொதுத்துறை நிறுவனங்கள்' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!