ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இவரின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் துணை முதலமைச்சர் பதவி வகித்த பில்லி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அமைச்சர் மொபிதேவி வெங்கட ரமண ராவ் ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வானதையடுத்து தாங்கள் வகித்துவந்த பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இதையடுத்து அந்த இரண்டு இடங்களும் காலியாகின. இந்த இடங்களுக்கு ஸ்ரீநிவாச வேணுகோபால், சீதிரி அப்பல ராஜூ ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்ரீநிவாச வேணுகோபால் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர். ராஜூ மீனவ சமுதாயத்தை சேர்ந்தவராவார்.
இவர்கள் இருவருக்கும் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் விஜயவாடாவிலுள்ள ராஜ்பவனில் இன்று (புதன்கிழமை) எளிமையான விழாவில் பதவியேற்பு விழா நடத்திவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சட்டப்பேரவை சபாநாயகர் டி சீதாராம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணா மற்றும் அப்பலா ராஜு ஆகிய இருவரும் 2019 ஆம் ஆண்டில் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; மனைவிக்கு அரசு வேலை - உ.பி. முதலமைச்சர் அறிவிப்பு!