ஒடிசாவில் உள்ள மிகப் பிரபலமான வணிக வளாகத்தில் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனா என்பவர், புகைப்பட கலைஞருடன் செய்தி சேகரிக்கச் சென்றார். அப்போது வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் அவரை பெண் ஊழியர்கள் இரண்டு பேர் தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனா, வணிக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதுதொடர்பாக ஜெனா, ஷகித் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இரண்டு பெண் ஊழியர்களையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இது பற்றி காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.