மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த அப்துல் ஷேக், கடந்த ஜூன் 30ஆம் தேதி செம்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு நபர்கள் தங்களை கரோனா அலுவலர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டு பரிசோதனை செய்துள்ளனர்.
அவரிடமிருந்து ஏடிஎம் கார்டை எடுத்த இருவரும், அவரை மிரட்டி ஏடிஎம் நம்பரை வாங்கி ரூ.54 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பாக அப்துல் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல் துறையினர், கோவிட் அலுவலர்கள் போல் நடித்த இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஹோண்டா சிட்டி கார் மற்றும் ஏடிஎம் கார்டை பறிமுதல் செய்துள்ளனர்.