டெல்லியில் நெப் சாராய் பகுதியில் வீட்டில் குடிபோதையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கொலையான நபரின் தங்கை கூறுகையில், ”என் அண்ணனை இரண்டு பேர் இழுத்துக் கொண்டிருந்தனர். நான் சந்தேகப்பட்டு கேள்வியெழுப்பினேன். அவர்கள் உடனடியாக ஓடிவிட்டனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளித்தேன்” என்றார்.
தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்த காவல் துறையினர், கொலையாளிகள் பிகார் செல்வதைக் கண்டுபிடித்து, பாட்னா ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன.
அதில், கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் மூன்று பேரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட தகாத வார்த்தைகளில் தீட்டியதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த இரண்டு நபர்களும் இணைந்து வீட்டின் உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி அவர் சடலத்துடன் தன்பாலின வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் பயந்த அவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக கிளம்பியுள்ளனர். பின்னர், அடுத்த நாள் காலை உடலை எடுத்துச் சென்றுவிடலாம் என்று வீட்டிற்கு வந்த போது கொலை செய்யப்பட்டவரின் தங்கை பார்த்ததை அடுத்து, அங்கிருந்து தப்பியோடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் எல்கேஜி மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!