தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாபத் மந்தல், லிங்காரெட்டி குடா பகுதியைச் சேர்ந்த பல்லவியும் (19), அசமல்லா மகேந்தர் (25) என்பவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டனர். இதேபோல் கேஷம்பேட்டா மந்தர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சுசிலா என்பவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் ஸ்ரீராமுலு என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் பண்ணை தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!