உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக அநாகரிகமான வகையில் போஸ்டர் வெளியிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய போஸ்டர் மார்ச் 13ஆம் தேதி ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த நாளே அதனை காவல்துறையினர் நீக்கியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய போஸ்டர் வெளியிட்டதாக மூவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதான்சு, அஸ்வானி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நபரான லாலுவை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் லக்னோவில் போராட்டம் நடத்தியது. இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கூறுகையில், "மக்களின் குரலை பாஜக நசுக்க நினைக்கிறது. அவர்களின் சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தினால் என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்பை யோகிக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன். தனது மடத்தை போல் அவர் மாநிலத்தை நடத்த விரும்புகிறார். இது சட்டத்துக்கு எதிரானது" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சராக மூன்றாண்டுகள் இருந்து சாதனை படைத்த யோகி