பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், ட்விட்டரில் #HappyBdayPMModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கட்சித் தொண்டர்கள், மக்கள் சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதனால், இந்திய அளவில் ட்விட்டரில் முதல் பத்து இடத்தையும் மோடியின் பிறந்தநாள் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. #happybirthdaynarendramodi என்ற ஹேஷ்டேக் முதலிடத்திலும் #HappyBdayPMModi இரண்டாமிடத்திலும் #HappyBirthdayPM மூன்றாமிடத்திலும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள பாஜக கட்சியின் அலுவலகங்களில் அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக கட்சியினர் நேற்று 69 அடி நீள கேக்கை வெட்டி கொண்டாடினர்.
மேலும், டெல்லியில் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தலைமையிலான பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை இந்தியா கேட்டின் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.
பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் முக்கிய அணையான சர்தார் சரோவர் அணை தனது முழு கொள்ளளவை எட்டுவதை பார்வையிடவுள்ளார்.
இதற்காக நேற்று (செப்.) இரவு 11 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.