உத்தரப் பிரதேசம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரை டியூஷன் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். இதனை அறிந்த ஆசிரியரின் மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாணவியிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை மாணவி ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவரை காவல் துறை கைது செய்தது.
டியூஷன் வகுப்பின்போது, மாணவியின் மீது ஆசிரியர் காதல் கொண்டதாகவும் பின்னர், மாணவியை வற்புறுத்தி பலமுறை வெளியே அழைத்துச் சென்றதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். அந்த ஆசிரியருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதன்மூலம் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ் சகோதரர் தற்கொலை - காவல்துறை விசாரணை