பக்தர்கள் அனைவருக்கும் 160 & 180 கிராம் அளவிலான சின்ன லட்டு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் விரும்புகிறது. அதற்கும் மேல் ஒவ்வொரு லட்டுவும் 50 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது.
இனி, தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக 160 - 180 கிராம் சின்ன லட்டு கிடைக்கும். அதன்பின்பு லட்டு ஒன்று ரூ.50க்கு விற்கப்பட உள்ளது. சந்தை விலையின் படி ஒரு லட்டு செய்வதற்கு சுமார் 40 ரூபாய் செலவாகிறது. அதன் மீது பக்தர்களுக்குத் தள்ளுபடி செய்து விற்பதால், அதிக இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, 'செவ்வாயன்று அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது குறித்து அனைவரும் ஒரு முகமாகக் கருத்து தெரிவித்தனர். எனவே இது குறித்து எடுத்த முடிவுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
லட்டு விலைத் தள்ளுபடியால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.2412 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தான கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையும் படிங்க: