ETV Bharat / bharat

'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி

ஹைதராபாத்: தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகம் (டிஎஸ்ஆர்டிசி) மாநில அரசுடன் ஒருபோதும் இணைக்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறிய அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தொழிற்சங்கம் சாராத புதியவர்கள் வேலைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

TSRTC strike
author img

By

Published : Oct 7, 2019, 1:45 PM IST

வேலை நிறுத்தம்

வடமாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை போன்று, தெலுங்கானாவில் 'பதுக்கம்மா' விழா பிரசித்தம். இவ்விழா ஆந்திராவின் சில பகுதிகளிலும் ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை, தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டிப்பு

இதனை கண்டித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அன்றைய தினம் மாலை ஆறு மணிக்குள் ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் அரசு மீண்டும் வாய்ப்பளிக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், பண்டிகை காலத்தில் தலைவலியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உயர்மட்ட கூட்டம்

இந்த நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் உயர்மட்ட கூட்டம் இன்று நடந்தது. இதில் போக்குவரத் துறை அமைச்சர் அஜய் குமார், மூத்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது அரசுப் பேருந்துகள் ஓடாததால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள், தனியார் பேருந்துகளின் கட்டண விலையேற்றம் குறித்து பேசப்பட்டது.

சந்திரசேகர் ராவ் அதிரடி

அப்போது சந்திரசேகர ராவ் கூறுகையில், "தெலங்கானா சாலைப் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. கடன் வேறு, ரூ.1200 கோடியிலிருந்து ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மோசமான நிலையில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. விழாக்காலத்தில் சட்டவிரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திட்டவட்டம்

அச்சுறுத்தல் தந்திரம், ஒழுக்கமின்மை, தலைவலியை உருவாக்கும் செயல்களுக்கு நிரந்தர முடிவை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. அரசு விதித்த காலக்கெடுவுக்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டனர். எந்தச் சூழ்நிலையிலும் தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகம் அரசுடன் இணையாது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது.

புதியவர்களுக்கு வாய்ப்பு

போக்குவரத்துத் துறையில் புதிதாக வேலைக்கு ஆள்கள் எடுக்கப்படவுள்ளனர். அவர்கள் எந்தத் தொழிற்சங்கத்தையும் சாராதவர்களாக இருப்பார்கள். அடுத்த 15 நாட்களில் நிலைமை சீராகும். இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே

'யுரேனிய சுரங்கத்தை அனுமதியோம்!’ - கேசிஆர் கர்ஜனை

'தேசத்தை தட்டியெழுப்பிய ஈடிவி பாரத்...!' - மத்திய அமைச்சர் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.