அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 23ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்தியாவில் அவர் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் ட்ரம்ப், வர்த்தக முன்னணி விவகாரத்தில் இந்தியா தங்கள் நாட்டை நன்றாக நடத்தவில்லை என்று கூறினார்.
அப்போது இரு தரப்பு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பொருளாதார ஒப்பந்தங்கள் ஏற்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், “இந்தக் கருத்துகள் கூறப்பட்ட வர்த்தக சூழ்நிலையை நாம் கவனிக்க வேண்டும்.
எனினும் இதனை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார். ட்ரம்பின் இந்தியப் பயணத்தின்போது அமெரிக்காவுடன் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற கேள்விக்கு, “ஐந்து ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன” என்றார்.
ஜப்பான் சொகுசுக் கப்பிலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்விக்கு, “அவர்கள் ஜப்பான் அலுவலர்களுடன் தொடர்பில் உள்ளனர். நிலைமை கவனித்துவரப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க : 'காஷ்மீர் போல் வடகிழக்கு மாநிலங்களில் நடக்காது' - அமித் ஷா உத்ரவாதம்