உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை 180ம் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5 லட்சத்து 49 ஆயிரத்து 147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 863 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது. சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ், கடந்த 20 நாள்களாக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் பரவி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 85 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,304 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்க அரசு தெரிவித்த கருத்தால் சர்ச்சை தொடங்கியுள்ளது. சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதில் இருந்து சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வார்த்தை போர் தொடர்கிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர், “கரோனா வைரஸ் பெய்ஜிங்கிலிருந்து பரவியது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கூற்றை மீண்டும் மீண்டும் கூறியதால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பழி விளையாட்டு தொடர்கிறது.
தனது நிர்வாகம் ஆட்சிக்கு வரும் வரை சீனா அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை காரணமாக சீனா, அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டது. சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் கட்டுப்பாடு இல்லாமல் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சொல்வதால் சிலர் வருத்தப்படுகிறார்கள். அதை நானும் அறிந்திருக்கிறேன். சீனாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. அமெரிக்கா மீது சீனாவும், சீனா மீது அமெரிக்காவும் மதிப்பு வைத்திருக்கிறது.
கரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் வேகமாக பரவியுள்ளது. இது மேலும் பரவக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுரைகளை பின்பற்றுங்கள்” என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த சீனா, கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தை அமெரிக்க தரப்பில் சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா: ட்ரம்ப்-ஜிங்பிங் பேச்சுவார்த்தை