ETV Bharat / bharat

'ராணுவத்தின் தடை அநியாயமானது' - ட்ரூகாலர் நிர்வாகம்! - ராணுவத்தின் தடை அநியாயமானது -ட்ரூகாலர்

டெல்லி: இந்தியா ராணுவத்தில் ட்ரூகாலர் தடை செய்திருப்பது அநியாயமானது, நியாயமற்றது என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் தடை அநியாயமானது -ட்ரூகாலர்
ராணுவத்தின் தடை அநியாயமானது -ட்ரூகாலர்
author img

By

Published : Jul 10, 2020, 7:38 AM IST

பாதுகாப்பு, முக்கியமான தரவுகள் கசிவதைத் தடுக்கும் நோக்கில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகள் இந்திய ராணுவத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை வரும் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ட்ரூகாலர் நிர்வாகத்தினர், 'இந்திய ராணுவத்தால் தடை செய்யப்பட்ட 89 செயலிகளில் ட்ரூகாலர் இருப்பது வருத்தமளிக்கிறது. ட்ரூகாலர் சுவீடனைச் சார்ந்தது. அதுமட்டுமின்றி, இந்தியாவை தனது தாய் நாடாகவே ட்ரூகாலர் கருதுகிறது.

ஸ்டாக்ஹோமை தலைமையிடமாகக் கொண்ட ட்ரூகாலர், அழைப்பாளர் ஐடி, ஸ்பேம் கண்டறிதல், செய்தி அனுப்புதல் என பலவற்றை பயனாளர்களுக்கு தொகுத்து வழங்குகிறது.

நம் குடிமக்களுக்கும், மதிப்புமிக்க நம்முடைய ஆயுதப்படை வீரர்களுக்கும் ட்ரூகாலர் பாதுகாப்பானது என்பதை நாங்கள் மீண்டும் உணர்த்துவோம். ராணுவத்தால் நீக்கப்பட்ட பட்டியலில் ட்ரூகாலர் இருப்பதற்கான காரணத்தை நாங்கள் இன்னும் அறியவில்லை. அதற்கான விசாரணையை நாங்கள் முன் வைப்போம்.

ட்ரூகாலர் இந்தியாவில் 170 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குச் சேவையை வழங்குகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இந்தத் தடை நியாயமற்றது. அதுமட்டுமின்றி அநியாயமானது' என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...டிக்டாக் தடை: ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மித்ரான் பதிவிறக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.