ETV Bharat / bharat

TRS கட்சியின் 20வது ஆண்டு விழாவை எளிமையாக கொண்டாடுங்கள் - KCR - சந்திரசேகர ராவ் தெலங்கானா ராஷ்டிராிய சமிதி கட்சி

ஹைதராபாத் : தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நேற்று தனது 20 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஊரடங்கை கடைபிடித்து எளிமையாகக் கொண்டாடும்படி கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

chandrasekhar rao
chandrasekhar rao
author img

By

Published : Apr 27, 2020, 8:25 AM IST

தெலங்கானா மாநிலம் உதயமாவதற்கு காரணமாக இருந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நேற்று 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த தினத்தை எளிமையான முறையில் கொண்டாடும்படி அக்கட்சித் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஆறு வருடங்களில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பல அற்பதங்களை நிகழ்த்தியுள்ளது. குடிநீர், விவசாயம், நீர்ப்பாசனம், தொழிற்சாலை என பலத் துறைகளில் சாதனை படைத்துள்ளோம்.

பல ஆண்டுகளால் மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளையும் தீர்த்துவைத்துள்ளோம். பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

கட்சியின் 20வது தொடக்க நாளை பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்ற உங்களின் ஆசை எனக்குப் புரிகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் எளிமையான முறையில் கொண்டாடும்படி தொண்டர்களை நான் வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : முன்னேற்றப் பாதையில் இந்தியா - சுகாதாரத் துறை நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.