ETV Bharat / bharat

தங்க கடத்தல் வழக்கு: சந்தேக வளையத்தில் முன்னாள் முதன்மைச் செயலர்

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை மும்முரம் காட்டிவருகிறது.

கேரள முதலமைச்சர்
கேரள முதலமைச்சர்
author img

By

Published : Sep 1, 2020, 8:18 PM IST

கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு ஜூலை 5ஆம் தேதி வந்த ரகசிய பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள், அதிலிருந்த 30 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் தொடர்பாக ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்குடன் பினராயி விஜயன் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதனால் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவ்வழக்கில் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய 20க்கும் மேற்பட்டோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவை இவ்வழக்கு தொடர்பாக சிவசங்கரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த மும்முரம் காட்டிவருகிறது. கடைசியாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி, அமலாக்கத்துறை சிவசங்கிரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

இதையும் படிங்க: அடுத்த தடுப்பூசி மருந்தும் இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது - அதிபர் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.