"தி பேட்டில் ஆஃப் பிலாங்கிங்" என்ற புதிய புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் எழுதியுள்ளார். இதன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "இந்து நாடு என்பது இந்துக்களுக்கானதல்ல. அது ஒரு சங்கி இந்துத்துவா நாடாகவே திகழும். நாம் விரும்பும் இந்தியாவை பாதுகாக்க என்னைப் போன்றோர் செயல்பட்டுவருகின்றனர்.
நேசிக்கும் நாட்டை ஒரு மதவாத நாடாக மாற்ற நான் நினைப்பதில்லை. எந்த வெறுப்புணர்வை நிராகரிக்க இந்தியா கட்டமைக்கப்பட்டதோ, அதையே இந்துத்துவா அமைப்பு நிலைநாட்ட விரும்புகிறது.
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகே குடியுரிமை திருத்த சட்டம் எதிரானதாகும். பாகிஸ்தான் போன்று ஒரு இந்துத்துவ நாட்டை கட்டமைக்க ஆளும் கட்சி முயற்சி செய்து வருகிறது. நம் சுதந்திர இயக்கம் இதற்காக செயல்பட்டது அதற்கு நேர் எதிராக ஆளும்கட்சி செயல்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்து மதமும் இந்துத்துவா கொள்கையும் ஒன்றல்ல. இந்துத்துவா கொள்கை மதம் சார்ந்தது அல்ல. அது அரசியல் கொள்கையே. வேற்றுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் நமக்கு போதித்துள்ளார்" என்றார்.