ETV Bharat / bharat

'ககன்யான் வீரர்களுக்கான பயிற்சி இன்னும் 3 வாரங்களில் தொடங்கப்படும்' - இஸ்ரோ சிவன்

author img

By

Published : Jan 1, 2020, 2:36 PM IST

Updated : Jan 1, 2020, 2:45 PM IST

பெங்களூர்: ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன்  தெரிவித்துள்ளார்.

isro-chief-k-sivan
isro-chief-k-sivan

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் - 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டை பொறுத்தவரை, ககன்யான், சந்திரயான் 3 ஆகிய திட்டங்களுடன் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனத்தையும் அனுப்ப இஸ்ரோவால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் நானோ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு, 500 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதற்கு சுமார் 30 கோடி ரூபாய் செலவாகலாம். மேலும் பிஎஸ்எல்வி பணிகளுக்கு 6 குழுக்களின் கீழ் 600 பேர் பணியாற்றவுள்ளனர்.

இதையும் படிங்க: 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்!

Last Updated : Jan 1, 2020, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.