புதுச்சேரியில் பழமையான சுதேசி மற்றும் பாரதி மில்கள் நேற்று(அக்.1) முன்தினம் முதல் மூடப்பட்டன. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று(அக்.03) புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, சுதேசி மில் அருகில் இருந்து தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தடைந்தனர்.
இந்த ஊர்வலத்தில் புதுச்சேரி ஆளும் அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தினர். இந்த தீப்பந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ,தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: