ETV Bharat / bharat

'ஊதியம் வழங்கவில்லை' - கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்! - salary protest by tourist boat workers

புதுச்சேரி: நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் தலைமை அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Jun 16, 2020, 6:33 PM IST

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்படும் நோணாங்குப்பம் படகு குழாம், கடற்கரை சாலையில் உள்ள அரசு உணவு விடுதி, உசுட்டேரி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சமையல் வேலை, படகு இயக்குபவர்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் சங்கத்தினர், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி உப்பளம் பகுதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் அமர்ந்து, கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ஊழியர்கள் தகுந்த இடைவேளியை பின்பற்றி அமர்ந்திருந்தனர்.

இதையும் படிங்க:கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.