கோவிட்-19 தளர்வுகள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், கேரள மாநிலத்தில் தற்போது சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விலக்கப்படும்.
மூணாறு உள்ளிட்ட மலைவாசத் தலங்கள் சுற்றுலா பயணிகளுக்குத் திறக்கப்படும். பயணிகள் அனைவரும் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். உள்ளூர் சுற்றுலாத் துறையானது மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். அதேவேளை, கேரளாவில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து பொம்மை துப்பாக்கியால் 2 வங்கிகளை கொள்ளையடித்த திருடன் - சிக்கியது எப்படி?