கரோனா வைரசின் தாக்கம் நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில் ஒவ்வொரு நாளும் பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அந்த வகையில், இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 1071 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி,
- சிகிச்சையில் இருப்போர் - 942
- குணமடைந்தோர் - 100
- இறந்தோர் - 29"
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலவாரியான பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், இறந்தோரின் எண்ணிக்கைப் பட்டியல் கீழே:
இதனிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு கரோனா தனிப்பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.