டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த நபருக்கும், இருதயம், வயிறு உள்ளிட்டப் பிரிவுகளில் பணியாற்றிவந்த செவிலியர்கள் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பிரிவில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றிய செவிலிக்கும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களில் பலர் டெல்லியின் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் ஒன்றான கோட்லா முராக்பூரில் வசித்துவருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவறையில் பணியாற்றி வந்த நான்கு ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பிற்காக பெல் நிறுவனத்துடன் கை கோர்த்த எய்ம்ஸ் நிறுவனம்