17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தனார். மக்களவைத் தேர்தலில் 61 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர் என பெருமிதமாக குறிப்பிட்ட அவர், அரசு அனைவருக்குமாக உழைத்துக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
வருங்கால தலைமுறையினருக்கு குடிநீரை சேமிக்கவே ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என தெரிவித்த ராம்நாத் கோவிந்த், நாட்டின் பின் தங்கிய 112 மாவட்டங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய முத்தலாக், நிக்ஹா-ஹலாலா போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என உறுதிபட பேசினார்.