ETV Bharat / bharat

சானிடைசர்கள் ஏற்றுமதிக்கு அனுமதி - மாநிலங்களுக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்!

சானிடைசர்கள் ஏற்றுமதியைத் தொடங்குவது பற்றி, ஆராய்வதற்காக அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் உள்ள சானிடைசர் உற்பத்தியாளர்கள், அவர்களின் உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பற்றி அறிக்கைத் தாக்கல் செய்ய, மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

to-check-feasibility-of-resuming-sanitiser-export-centre-asks-states-about-production-capacity

author img

By

Published : May 15, 2020, 1:56 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவியதையடுத்து, உள்நாட்டுத் தேவைகளுக்காக சானிடைசர்கள் ஏற்றுமதிக்கு மே 6ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் சானிடைசர்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளிப்பது பற்றி ஆராய்வதற்காக, மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலங்களில் உள்ள சானிடைசர்கள் உற்பத்தியாளர்கள், அவர்களின் உற்பத்தித் திறன் ஆகியவை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ''அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சானிடைசர் உற்பத்தியாளர்கள், அவர்களின் பெயர், முகவரி, அவர்களின் உற்பத்தித் திறன், ஏப்ரல் மாதத்தில் செய்யப்பட்ட உற்பத்தி ஆகியவைப் பற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

அதேபோல், அந்த உற்பத்தியாளர்களால் உள்ளூரில் தேவைக்கேற்ப சானிடைசர்கள் உற்பத்தி செய்ய முடிகிறதா, சந்தைகளில் சானிடைசர்கள் எளிதாகக் கிடைக்கிறதா என்பதைக் கூறவேண்டும்.

கரோனா வைரஸ் சூழலால், உள்ளூரில் சானிடைசர் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், உள்ளூர் பயன்பாடுகளின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். இந்த விவரங்களை வைத்தே சானிடைசர்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கலாமா என்பது பற்றி ஆராயப்படும்.

அனைத்து மாநிலங்களும் தங்களது அறிக்கைகளை நண்பகலுக்குள் அனுப்பவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீட்டுவசதி துறைக்கு ரூ. 70 ஆயிரம் கோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.