ETV Bharat / bharat

அரசியல் தலைவர்களுக்கு வலை வீசும் வருமானவரித் துறை

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்.ரங்கசாமி
author img

By

Published : Apr 17, 2019, 5:11 PM IST

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்களின் இன்றிக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அதுபோன்று, அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், வேட்பாளர்களின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் தேர்தல் பறக்கும்படையினரும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை அலுவலர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அது எந்தெந்த பகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியலும் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டிலும் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தப்பட்டது.

என்.ஆர்.காங்., கட்சித் தலைவருமான என்.ரங்கசாமியின் வீட்டில் வருமான வரிச் சோதனை

இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர், என்.ஆர்.காங்., கட்சித் தலைவருமான என்.ரங்கசாமியின் விநாயகர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் ஐந்து பேர் கொண்ட தேர்தல் பறக்கும்படை குழு திடீரென சென்றது. அங்கு வீட்டில் கீழ்த்தளத்தில் சோதனை செய்ததில் எதுவும் சிக்கவில்லை ந்ந்த் தெரிகிறது. இதனை தொடர்ந்து மேல் தளத்திற்குச் செல்ல முற்பட்டபோது அதற்கான சாவி இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.

இதற்கிடையே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், ரங்கசாமி வீட்டின் அருகே முகாமிட்டு இருப்பதாகத் தகவல் கசிந்ததையடுத்து ரங்கசாமி கட்சி ஆதரவாளர்கள் அவர் வீட்டு முன் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

இது குறித்து உயர் அலுவலர்கள் கூறுகையில், நாங்கள் எந்த சோதனையும் செய்யவில்லை, சோதனை செய்யவும் வரவில்லை என்று மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர்.

Intro:புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை

Body:புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி இவர் முன்னாள் முதல்வர் இவர் கட்சி சார்பில் கே நாராயணசாமி புதுச்சேரியில் போட்டியிடுவதால் தேர்தலுக்கு பணப் பட்டுவாடா ஒரு கட்சி செய்யப்படுவதாக புகார் வந்தது என்ற பெயரில் இன்று பிற்பகல் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் துறை பறக்கும் படையினர் முன்னாள் முதல் ரங்கசாமி வீடு அமைந்துள்ள விநாயகர் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு 5 பேர் கொண்ட குழு திடீரென சென்றது அங்கு வீட்டில் கீழ்தளத்தில் எதுவும் சிக்கவில்லை இதனை தொடர்ந்து மேல் தளத்திற்கு செல்ல முற்பட்ட போது அதற்கான சாவி ஆட்சித் தலைவரிடம் உள்ளதால் அவர் அப்போது வீட்டில் இல்லை எனவே எதுவும் சிக்காத காரணத்தால் அவர்கள் திரும்பினர் இதற்கிடையே அவர்கள் ரங்கசாமி வீட்டு அருகே முகாமிட்டு போவதாக தகவல் வந்துள்ளது இதையடுத்து ரங்கசாமி கட்சி ஆதரவாளர்கள் அவர் வீட்டு முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Conclusion:புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.