சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான முடிவு எடுப்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பன்வாரிலால் புரோஹித் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.