பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.
இதனையடுத்து இன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னை, காவிரி பிரச்னை குறித்துக் எடுத்துரைக்கப்பட்டது.
பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.