இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும், தேசியச் சோதனை நிறுவனம் வாயிலாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர், உதவிப் பேராசிரியர் பணிகளில் சேர்க்கை பெறுவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் இந்த தேசிய தகுதித் தேர்வில் மொத்தம் 81 வகையான பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம், அதற்கான இணையான படிப்புகளில் பொதுப்பிரிவினர் 55 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமலும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் 50 விழுக்காடு குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.
சில பாடப்பிரிவுகளுக்கு தொடர்புடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தவிர்த்த இணையான வேறு சில பாடப்பிரிவுகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். மேலும் இத்தேர்வு இந்தியா முழுவதும் 224 மையங்களில் நடத்தப்படவுள்ளது. இது குறித்த விவரங்களைத் தேசியச் சோதனை நிறுவனம் தகவல் குறிப்பேட்டில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க :நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: உதித்சூர்யா, தந்தை வெங்கடேஷ் இருவருக்கும் நீதிமன்ற காவல்!