இந்தோ-திபத்திய எல்லையான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பும்லாவில், கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-சீனா போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு கலந்து கொண்டு, உயிரிழந்த ராணுவ வீரருக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பெமா காண்டு, “இது 1962 அல்ல, 2020ஆம் ஆண்டு. இப்போது எல்லா விஷயங்களும் வேறுபட்டவையாக உள்ளன. சீனாவின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவமும் மக்களும் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் அருணாச்சல் மக்கள் இந்திய இராணுவத்தின் பின்னால் நிற்க தயங்க மாட்டார்கள்” என்றார்.
மேலும், “எல்லைப் பகுதிகளின் வளர்ச்சி, குறிப்பாக சாலைகள் மிக முக்கியம். அருணாச்சலப் பிரதேசத்தில் இந்த பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் இதுபோன்ற பல உள்கட்டமைப்பு மறுசீரமைப்புகளை விரைவில் மாநிலத்தில் காண்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...உலகளவில் கரோனா பாதிப்பு நிலவரம்!