டிக்டாக் தற்போது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்ற ஒரு செயலி ஆகும். எந்த இடம் என்று எல்லாம் பொருட்படுத்தாமல் பார்க்கும் அனைத்து இடங்களிலும் டிக்டாக் செய்யும் முயற்சியில் இளைஞர்கள் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.
புனேவில் இளம்பெண் ஒருவர் பேருந்தை மறித்து அதன் முன்பு டிக்டாக் செய்துள்ளார். அதன் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இளம்பெண் திடீரென்று டிக்டாக் செய்ய முயன்றதை பார்த்து பேருந்திலிருந்த ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என ஏராளமானோர் என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பினார்கள். டிக்டாக் காணொலி மூலம் பிரபலமடைய வேண்டும் என்று அந்தப் பெண் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சாலைகளில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குற்றம் என்றும் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு கைது செய்யப்படலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் அந்தப்பெண் யார் என தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்கேட்டிங்கில் கார்பா நடனம் - நவராத்திரி ஸ்பெஷல்