உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கோலா வனப்பகுதியின் பக்ஹாரி கால்வாய் அருகே இன்று (ஜூன்.2) பிறந்த புலிக்குட்டி ஒன்று சில மணி நேரங்களிலே உயிரிழந்து கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இறந்த புலிக்குட்டியினைக் காண, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டனர்.
இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வனத்துறையினர், புலிக்குட்டியை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். விசாரணையில், குறை மாதத்தில் புலிக்குட்டி பிறந்திருக்ககூடும்; அதுவே மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பசுவை வேட்டையாடிய புலி : அச்சத்தில் மலை கிராம மக்கள்