ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள துலிசித்தான் ரயில்வே நிலையத்தின் ஊழியர்கள் ரயில் பாதையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டனர். பின்னர், அதே ரயில் நிலையத்தில் மற்றோரு ரயில் பாதையில் பெண் சடலமும், ஒரு குழந்தையின் சடலமும் இருப்பதைக் கண்டனர்.
இதையடுத்து இது குறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூன்று சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இறந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.