ETV Bharat / bharat

சொகுசு கார்களை திருடியவர்கள் கைது! - 2 person arrested

புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரியில் சொகுசு கார்களை திருடிய திருச்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையில் கைது செய்து, அவர்களிடமிருந்து ஐந்து கார்களை பறிமுதல் செய்தனர்.

Those who stole luxury cars were arrested in trichy

author img

By

Published : Aug 22, 2020, 6:39 PM IST

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் நிர்மல்குமார். இவர், தனது இன்னோவா காரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி உள்ளதாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இப்புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காரை திருடியவர்களை தேடி வந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த ராஜாமணி என்கிற பெல் மணி, ஜாபர் ஹூசேன் ஆகியோர் காரை திருடியதாகத் தெரிய வந்ததையடுத்து, புதுச்சேரி தனிப்படை காவல்துறையினர் திருச்சி சென்று மணி, அவனது கூட்டாளி பாபுவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இவர்கள் தமிழ்நாட்டிலும் பல்வேறு சொகுசு கார்களை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் தமிழ்நாட்டில் திருடிய மூன்று கார்கள், புதுச்சேரியில் திருடிய இரண்டு கார்கள் என, மொத்தம் 90 லட்சம் மதிப்புள்ள ஐந்து விலையுயர்ந்த சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கார் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். கார் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான அனில் குமாரை தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.