ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து 370, 35ஏ என்னும் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு நேற்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியினர் ஆதரித்த நிலையில், எதிர்கட்சியினர் அதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். மாநிலங்களவையில் கடும் அமளிக்கிடையே மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இதனை அறிவித்தார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில், தனியார் பள்ளி ஒன்றில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஆதரித்தனர். அதையடுத்து பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் 370 ரத்து என்பது போல் மனித சங்கிலியில் அமர்ந்திருந்தனர். இது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது.