ETV Bharat / bharat

110 கிலோ ஆடு... ரூ. 80 ஆயிரம் விலை கிடைத்தும் கொடுக்க மறுத்த உரிமையாளர்! - Bakrid goat

பெங்களூரு: கலப்பினத்தைச் சேர்ந்த 110 கிலோ எடை கொண்ட ஆட்டை 80,000 ரூபாய்க்கு விற்க உரிமையாளர் மறுத்துள்ள சம்பவம் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நிகழ்ந்துள்ளது.

பக்ரீத் ஆடு  கர்நாடகா  eid  Bakrid festival  Bakrid goat  110kg goat karnataka
110 கிலோ ஆடு.. 80ஆயிரம் ரூபாய் விலைகிடைத்தும் தரமறுத்த உரிமையாளர்
author img

By

Published : Aug 1, 2020, 10:51 PM IST

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அசைவ உணவை சமைத்து அண்டைவீட்டாருக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்தளித்து உண்ணுவர். இந்த தியாகத் திருநாளையொட்டி சந்தைகளில் ஆடுகளின் வியாபாரம் அமோக நடைபெறும். அதுபோல், கர்நாடகா மாநிலம் பெல்லாரி ஆட்டுச்சந்தையில் ஒரு ரூசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

80,000 ரூபாய்க்கு கேட்ட ஆடு ஒன்றை அதன் உரிமையாளர் கொடுக்க மறுத்துள்ளார். இதுகுறித்து நமது ஈடிவி பாரத் நிருபர் அந்த ஆட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, "ஜாமன்பூரி, ராஜஸ்தான் கலப்பினத்தைச் சேர்ந்த இந்த ஆடு 110 கிலோ எடையுள்ளது.

இந்த ஆட்டை பக்ரீத் திருநாளன்று இறைவனிடம் கொடுப்பதற்காக வளர்த்தேன். நான் ஆடு விற்பனை செய்யும் தொழில்தான் செய்கிறேன். இந்த பக்ரீத் பண்டிகையையொட்டி 40 ஆடுகளை விற்றுள்ளேன். ஆனால், 80,000 ரூபாய்க்கு விலை கிடைத்தும் 110 கிலோ எடை கொண்ட அந்த ஆட்டை விற்க மனம் வரவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தியாக திருநாள்: டெல்லி ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.