உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் 20 லட்ச காவலர்கள் ஈடுபடுத்தும் ஒரு தேசமாக நாம் இருக்கின்றோம். பிரிட்டிஷ் நம்மை ஆண்டபோது, அவர்களின் பணி என்பது, ஆட்சியாளர்களை பாதுகாப்பதாக மட்டுமே இருந்தது. ஆனால், சுதந்திரத்தைப் பெற்ற பின்னர், மக்களை பாதுகாப்பது என்பது அவர்களின் முதன்மையாக கடமையாக இருக்க வேண்டும்.
சமூகத்தைப் பாதுகாக்க சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை கடமையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று பல முறை தேசிய காவல்துறை கமிஷன் அறிவித்துள்ளது. எனினும், காவல் படை என்பது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கொண்ட குழுவாக மாறி வருவதாக பல முறை உச்ச நீதிமன்றம் கவலையை தெரிவித்துள்ளது.
எனினும், அப்பாவிகளின் உயிரைப் பறிக்கக்கூடிய துன்புறுத்தும் வழிகள் என்பவை, மோசமானதில் இருந்து தற்போது மிகவும் மோசமானது என்று மாற்றம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் அண்மைகால வெளிப்படையான உதாரணமாக இருக்கிறது.
இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்ட கொடுமை
மக்களின் உயிர்களைப் பாதுகாக்க, கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பொது ஊரடங்கை அமல்படுத்துவது என்று அரசு தீர்மானித்தது. கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுவது மகராஷ்டிரா மாநிலத்துக்கு இணையாக தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. எனவே, தமிழ்நாடு கடுமையான பொது ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது.
தம்முடைய மொபைல் கடையை மாலை 7.30க்குப் பின்னரும் திறந்து வைத்திருந்தார் என்று ஜூன் 19-ம் தேதி பொது ஊரடங்கு விதிகளை மீறியதாக ஜெயராஜ்(60) காவலர்களால் தாக்கப்பட்டார். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு கைது செய்யப்படுகிறார்.
தமது தந்தையை விடுவிக்கும்படி கேட்டு அவரது மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, அவரும் கைது செய்யப்படுகிறார். 22ஆம் தேதி ஜெயராஜுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. அவர் கோவில்பட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ஆனால், அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடுத்த நாள் அதே மருத்துவமனையில் மகனும் உயிரிழந்துவிட்டார். கிளர்ந்தெழுந்த பொதுமக்கள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் லாக் அப்பில் மரணம் அடைந்ததற்கு காவல் துறை கொடுமையே காரணம் என்று குற்றம்சாட்டினர். இந்த செயல்பாட்டில், நீதித்துறை நடுவரின் விசாரணையின் போது, நீதி முறையைத் தவறாக நிர்வகிப்பதில் காவல் படைகள் முக்கிய பங்கு வகித்திருப்பது அம்பலத்துக்குவந்தது.
காவல் துறை அட்டூழியங்கள்
கோவில்பட்டி மாஜிஸ்திரேட் எம்.எஸ்.பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையின்படி, காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தினந்தோறும் எடுக்கப்படும் காட்சிகள் ஒவ்வொரு நாளின் முடிவிலும் தாமாக அழிக்கப்படும்படி முன்னரே ஆட்டோ டெலிட் முறை செட் செய்யப்பட்டிருந்தது.
இதன் மூலம் தங்களின் குற்றத்துக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைத்து விடக்கூடாது என்பதில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபட்டிருக்கின்றனர். கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகள் வரை புலனாய்வு கமிட்டியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர்.
ஒரு கான்ஸ்டபிள், உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூட சவால் விடுகிறார். இதன்மூலம் அவர்கள் சட்டத்தை அற்பமாக மதிக்கின்றனர் என்பது வெளிப்படுகிறது என கமிட்டி விமர்சித்துள்ளது.
பெண் கான்ஸ்டபிள் வாக்குமூலம் கொடுக்கும் போது, மிகவும் அச்சத்தால் இருந்துள்ளார். தந்தை மகன் இருவர் மீதும் அந்த இரவில் காவல் துறையினர் எந்த அளவுக்கு அட்டூழியங்கள் மேற்கொண்டனர் என்று விரிவாக தெளிவாக கூறினார். பலமணி நேரங்கள் ஒன்றாகவும், இருவரையும் மாறி, மாறி தாக்கினர். அவர்களின் உடல்களில் இருந்து ரத்தம் வடியும் அடித்துத் துவைத்தனர்.
அங்கிருந்த மரசாமான்கள் மற்றும் இதர பொருட்கள் மீதெல்லாம் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. குற்றவாளிகளின் கைகளில் இருந்து அப்பாவிகளைப் பாதுகாக்க வேண்டிய பணியின் அதிகாரம்தான் காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாறாக இந்த அதிகாரங்களை துரதிஷ்டவசமாக நிர்கதியற்று இருக்கும் குடிமக்கள் மீது காவல் துறை தவறாக உபயோகிக்கின்றனர். காவல் நிலையங்களில் அடிப்படை உரிமைகள் என்பது அர்த்தமற்று போய்விட்டன. 70 ஆண்டுகள் இந்தியா சுதந்திர ஜனநாயாக நாடாக வளர்ச்சியடைந்த போதிலும், இந்த அட்டூழியங்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
உடனடியான மறுசீரமைப்புத் தேவை
அமெரிக்காவில் அண்மையில் ஆப்ரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் கைது செய்யப்படும்போது, காவலர் அதீத சக்தியை உபயோகித்ததால், அவர் உயிரிழந்துவிட்டார். அமெரிக்கா முழுவதும் பெரும் அளவுக்குப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போலீஸ் அட்டூழியத்துக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இப்போது அரசு, தகுந்த காவல் துறை சீர்த்திருந்தங்களை மேற்கொள்வது குறித்து பணியாற்றி வருகின்றனது. மினியாபோலிஸ் என்ற அரசமைப்பு, நகர போலீஸ் துறையை ஒழிப்பது என்று முடிவு செய்துள்ளது. அதேபோல உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகியவை இப்போதைய தேவைக்கு ஏற்ப பொருந்தும்படி காலாவதியான காவல் முறைகளை சரி செய்துவருகின்றனர்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக காவல் துறை சீர்திருத்தங்களுக்கான முன்னெடுப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாகரிகமடைந்த வாழ்க்கைத் தரங்களுக்கு ஒரு கேலிக்கூத்தாக இருக்கின்றன.
சட்டத்தின் படியான ஆட்சியை அமல்படுத்தியுள்ள 126 நாடுகளின் பட்டியலில் இந்தியா 68ஆவது இடம் வகிக்கிறது. எட்டு அம்ச வகைப்பாட்டின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் இந்தியா 111ஆவது இடத்தில் நிலைபெற்றுள்ளது.
அரசின் புள்ளிவிவரங்களின்படி ஒவ்வவொரு நாளும் நாட்டில் சராசரியாக 15 காவல் துறை லாக் அப் அட்டூழியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒன்பது பேர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.
காவல் துறை கஸ்டடியில் மரணங்கள் என்பதை அந்த நாளின் மிகவும் எளிமையான ஒன்றாகப் பார்க்கக்கூடாது என்று தேசிய மனித உரிமைகள் கமிஷன் கூறி உள்ளது. வெளிப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த எண்கூட நிறைய நேரம் எடுக்கும்.
ஒவ்வொன்றும் சாதாரணமாகவும், இயல்பாகவும் நடக்கின்றன. இப்போதைய இரக்கமற்ற தன்மை மிகவும் ஆழமாக வேரூன்றி உள்ளது. ஒரு சில அலுவலர்கள் என்றாலும், லாக்-அப் மரணங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர். அமைப்பு ரீதியான நல்ல மாற்றங்கள் என்பது சிக்கலானது. இந்த நேரத்தில் ஒரு முறையான கடுமையான மறுசீரமைப்பே தேவை.
யார் ஒருவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல
அரசியலமைப்புச் சட்டம்தான் யார் ஒருவருக்கும் முதன்மையான ஒன்றாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறது. பல்கேரிய பிரதமர் கடந்த மாதம் 23-ம் தேதி சர்ச்சுக்குப் போகும்போது முகக் கவசம் அணியாததால் நாட்டின் சுகாதாரத்துறை அவருக்கு 300 லெவ்கள் (ரூபாய் மதிப்பில் 13,000) அபராதம் விதித்தது. இப்படித்தான் அங்கு சட்டம் மதிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் 2005-2015க்கும் இடையே 28 விழுக்காடு குற்றம் அதிகரித்திருக்கிறது. ஆனால், குற்றவாளிகளை கையாளுவதில் மற்றும் தண்டனை கொடுப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இது குறித்து முன்னாள் உ.பி டிஜிபி பிரகாஷ் சிங் கூறுகையில், “சட்டப்படியான ஆட்சி இங்கு இல்லை என்பது இதன் அர்த்தம் அல்ல. அரசியல் ஆட்சியாளர்களின் சட்டமும் நடைமுறையில் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விக்க, காவல் துறையினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யச் சொல்வதை செய்வார்கள். இந்த சூழலில் அவர்களிடம் இருந்து நாம் எப்படி தார்மீக ஒருமைப்பாடு, பொது பாதுகாப்பு உணர்வை எதிர்பார்க்கமுடியும்? காவல் துறை மீது அதிகரிக்கப்படும் அழுத்தங்களை நாம் நிராகரிக்கும்பட்சத்தில் ஜனநாயக முறையின் அடிப்படைகள் அசைக்கப்படக்கூடும் என்ற பல ஆண்டு கால எச்சரிக்கைகள் செவிட்டு காதுகளில்தான் விழுகிறது.
அரசியலைமைப்பு விழும்பியங்களை கேலிசெய்வது தொடர்ச்சியாக ஒழுங்கீனமற்ற அதிகாரிகள் அமைப்பு முறையில் இருக்கும் வரை, காவல்துறையின் புகலிடமாக அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப லாக்அப் குற்றங்கள் நடக்கின்றன. அப்பாவிகளின் மரண ஓலம் கருநிழல் படித்த சிறைகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நல்ல தொழில் முறையுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், சாவல்களை எதிர்கொளும் வலுவுடன், நவீன பயிற்சிகள் உள்ளிட்டவற்றைக் கொண்ட ஒரு புதிய வகை காவல் துறையை உருவாக்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்.
இப்போதைய பிரதமர் மோடி, ஸ்மார்ட் ஆன காவல் துறை தேவை என்று வலியுறுத்துகிறார். தேவைப்படும் தொழில்முறை சுதந்திரம் மற்றும் பொறுப்புடைமை கொடுக்கப்படாமல், மேலோட்டமான சீர்திருத்தங்களால் மட்டும் பொதுமக்களின் சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும்.
அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதற்கு காவல் துறையானது ஒழுக்கத்தை உறுதி செய்யும்போது, சட்டத்தின் ஆட்சி நடக்கும்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுத்து தங்களுக்கு தாங்களே கடமையாற்றும்போது மட்டும்தான் இந்த நாடு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: டெல்லியில் படிப்படியாக குறையும் கரோனா பாதிப்பு