ETV Bharat / bharat

தடம் மாறியதால் அதிகாரப்பசிக்கு இரையான பாஜக! - ideologically assertive party to power-hungry party

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைத்த பாஜக அதிகாரப் பசிக்கு இரையானதாக அரசியல் நிபுணர் ராஜீவ் ராஜன் நமது ஈடிவி பாரத்துக்கு அனுப்பிய கட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார். அதன் முழுத் தொகுப்பையும் காணலாம்.

BJP
BJP
author img

By

Published : Dec 11, 2019, 8:11 PM IST

கொல்லைப்புறமாக பாஜக ஆட்சியமைத்த நிகழ்வுகளில் சில

* 2014 மக்களவை பொதுத்தேர்தலில் அபரிமித வெற்றி பெற்ற பாஜக, முதன் முதலில் கட்சித்தாவல் விளையாட்டை அருணாச்சலப் பிரதேசத்தில் தொடங்கியது. 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, தன் கூட்டணி கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சி ஆட்சியமைக்க உதவியது. பின்னர், எதிர்பாராத திருப்பமாக 2016ஆம் ஆண்டு வரை அங்கு காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த பெமா காண்டுவையும் தன் பக்கம் வளைத்து, பாஜக சார்பில் முதலமைச்சராக்கி, இன்றுவரை அவரே முதலமைச்சராக தொடர்கிறார்.

* 2017ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், காங்கிரஸ் 28 இடங்களிலும் பாஜக 21 இடங்களிலும் வெற்றிபெற்றன. கூடுதல் இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கவிடாமல், சிறு சிறு கட்சிகளின் தயவுடன் பாஜக ஆட்சியமைத்தது.

* 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் 17, பாஜக 13 தொகுதிகளைக் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கான இடங்களைக் காண்பித்து பாஜகவே ஆட்சியமைத்தது. பின்னர், ஜுலை 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்களை கட்சித் தாவச்செய்து, தனது பலத்தை 27ஆக பாஜக உயர்த்திக் கொண்டது.

அமித் ஷா
அமித் ஷா

* ஜனவரி 2018ஆம் ஆண்டு நாகாலாந்திலும் பாஜக தனது கைவரிசையை காட்டியது. அங்கு நாகா மக்கள் முன்னணியை உடைத்து, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி என்ற புதிய கட்சி உருவாகக் காரணமான பாஜக, அக்கட்சியின் நெய்பியூ ரியோ என்பவரை இடைக்கால முதல்வராக்கி ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவருகிறது.

* 2018ஆம் ஆண்டு மேகாலயாவில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 21இல் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்தது. இங்கு இரண்டே இடங்களில் வென்ற பாஜக, 19 தொகுதிகளில் வென்ற தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டு வைத்து, மற்ற சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து அங்கும் ஆட்சியை பங்கு போட்டது.

* ஜூலை 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவிலும் பாஜக குறுக்கு வழியிலேயே ஆட்சிக்கு வந்தது. இங்கு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசை கவிழ்த்தது. காங்கிரஸ் கட்சியின் 14 எம்.எல்.ஏ.க்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 3 எம்.எல்.ஏ.க்கள் என 17 பேர் பதவியை ராஜினாமா செய்ய அந்தக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்த 17 பேரில் 16 பேர் பாஜகவில் இணைந்து அதில் 13 பேர், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக துரோகம்

* 2014 பொதுத்தேர்தலின்போது, ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்குவதாக வாக்குறுதி அளித்து தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்தது பாஜக. மத்தியில் ஆட்சியமைத்து நான்கு ஆண்டுகளாகியும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டி 2018ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே வெளியேறியது தெலுங்கு தேசம்.

* 2014ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன், தங்களுடன் முற்றிலும் கொள்கை முரண் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால், 2018 ஜூனில் திடீரென கூட்டணியை பாஜக முறித்துக்கொண்டது.

நரேந்திர மோடி, சரத் பவார்
நரேந்திர மோடி, சரத் பவார்

* ஏப்ரல் மாதம் 2019ஆம் ஆண்டு சிக்கிமில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஆனால் அங்கு 15 எம்எல்ஏக்களுடன் முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழ்ந்த பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் 10 எம்எல்ஏக்களை ஒரே மாத்தில் தங்கள் கட்சிக்கு தாவச் செய்தது. தற்போது அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக திகழ்கிறது.

* தற்போது தேர்தல் நடைபெற்றுவரும் ஜார்கண்ட் மாநிலத்திலும் தொகுதிப் பங்கீட்டு பேச்சில், நீண்ட காலம் தங்களுடன் கூட்டணியிலிருந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் பாஜக முரண்டு பிடித்தது. இதனால் அதிருப்தியடைந்த ஏஜேஎஸ்யு, எல்ஜேபி ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டன.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அக்டோபர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில், ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து கட்சித் தாவிவந்தவர்கள் ஆவர். இதில் பலர் பெரும் ஊழல் புகார்களுக்கு ஆளானவர்கள். இப்படி ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜகவின் இச்செயலை அக்கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைச் சமாளிக்க, அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ராவ்சாஹேப் தன்வே, பரப்புரைக் கூட்டத்தில் கூறியது என்ன தெரியுமா?

'பாஜகவிடம் ஒரு சலவை எந்திரம் உள்ளது. கட்சியில் யாரையும் சேர்க்கும் முன், சலவை எந்திரத்தில், குஜராத் தயாரிப்பான நிர்மா சலவைப் பொடி போட்டு அவர்களின் ஊழல் கறையைப் போக்கிவிடுவோம்' என்றார். பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சுட்டிக் காட்டவே இதனை அவர் குறிப்பிட்டார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஆனால், மகாராஷ்டிரா மக்களோ, உங்க சலவை எந்திரமும் சரி, சலவைப் பொடியும் சரி காலாவதியாகிவிட்டது; பாஜகவின் பாச்சா எப்போதும் பலிக்காது என்பதைத் தேர்தல் முடிவில் நிரூபித்துவிட்டனர். இந்தத் தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களை பாஜகவால் பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன் அமைத்த கூட்டணியையும் தக்கவைக்க முடியாமல் போனது.

அத்துடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் முகாமிலிருந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என பாஜக முயற்சித்தது. ஆனால், தோல்வியை தழுவியது. அதைவிட, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் நள்ளிரவில் கூட்டு வைத்தது தோல்வியில் முடிந்தது. இதனால், பாஜகவின் பெயருக்கே பெரும் களங்கமாகிவிட்டது. இதனால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டு சேர்ந்ததை சந்தர்ப்பவாதம் எனக் குற்றச்சாட்டுவதற்கான தார்மீக உரிமையையும் பாஜக இழந்தது.

மகாராஷ்டிரா தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு 220 இடங்களுக்கு மேல் வெற்றிகிட்டும் என்ற பெரும் நம்பிக்கையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை, பாஜகவின் பட்னாவிஸ் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்யத் தொடங்கினார். தேர்தலுக்குப் பின் மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை ஏற்படும் என கொக்கரித்த பட்னாவிஸ், சட்டப்பேரவையில் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக அமர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். எதிர்க்கட்சியாகிவிட்ட பாஜகவோ இப்போது, முரண்பாடான கொள்கைகளால் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்டி விரைவில் சிவசேனா கூட்டணி அரசு வீழ்ந்துவிடும் எனக் கூற தொடங்கியுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

ஆனால், பாஜக கணக்குப் போடுவதுபோல், சிவசேனா அரசு அவ்வளவு எளிதில் வீழ்ந்துவிடும் என்று தெரியவில்லை. ஏனெனில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவ்வளவு சீக்கிரம் சிவசேனா அரசு வீழ்ச்சியடைய விடமாட்டார். சிவசேனா, காங்கிரஸ் இடையே மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், அதனை சாமர்த்தியமாக சரத் பவார் சமாதானப்படுத்திவிடுவார் என்பதும் காரணம். பாஜகவை சமாளிப்பது பவாருக்கு கைவந்த கலை என்பது பல சமயங்களில் உண்மையாகியுள்ளது. எனவே கூட்டணியில் எந்தப் பிரச்னை என்றாலும் அவர் அவ்வளவு எளிதில் பின்வாங்கப் போவதில்லை.

பொது வாழ்க்கையில் 52 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பவார், மகாராஷ்டிரா அரசியலில் தனிப்பெரும் செல்வாக்குப் பெற்றவர். அவரை துச்சமாக மதித்த பட்னாவிஸ், தேர்தலுக்கு பின் மகாராஷ்டிரா அரசியலில் பவாரின் கதை முடிந்துவிடும். மகாராஷ்டிரா மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்துவிடுவார்கள். எனவே பவார் தனது மூட்டை முடிச்சுகளைக் கட்ட வேண்டியதுதான் எனக் கொக்கரித்திருந்தார். இதைப் பவாரால் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

இது மட்டுமின்றி, பிரதமர் மோடியும் பரப்புரையின்போது, பாகிஸ்தான் ஆதரவாளர் என பவார் மீது மற்றொரு தாக்குதலைத் தொடுத்தார். தேர்தலுக்கு முன், செப்டம்பர் 15ஆம் தேதி நடந்த கட்சியின் சிறுபான்மை பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய பவார், தாம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தபோது, தம்மை நன்கு உபசரித்தாகப் பவார் பாராட்டி பேசியதையே பிரதமர் மோடி, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மற்றொரு பக்கம் பாஜக தலைவர் அமித்ஷா கிண்டலாகக் கூறிய ஒரு கருத்தும் பவாரை கோபம் கொள்ளச் செய்துவிட்டது. தேர்தலின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பலர் பாஜகவுக்கு தாவுவதை குறிப்பிட்ட அமித் ஷா, நாங்கள் கதவைத் திறந்துவைத்தால் பவாரைத் தவிர்த்து, ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவில் இணைய வரிசையில் நிற்கத் தயாராக உள்ளார்கள் எனக் கூறியிருந்தார். கடைசியில், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த நிதி மோசடி புகாரிலும் பவாரை சிக்கவைத்தது அமலாக்கத் துறை. இப்படி பவார் பல வகையிலும் பாஜகவால் குறிவைக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று, பாஜகவின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் சுக்குநூறாகிவிட்டது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு 50 இடங்களே என பாஜக போட்ட கணக்கு தப்புக்கணக்காகி, தேசியவாத காங்கிரஸ் மட்டுமே 54 இடங்களில் வென்றது. இதனால், பரப்புரையின்போது தம்மை தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்ததற்கு மனப்பூர்வ நன்றி எனக்கூறி பாஜகவை சீண்டினார் பவார்.

இதனால், தேர்தலுக்குப்பின், மகாராஷ்டிர அரசியலில் பவாரின் கை ஓங்கப்போகிறது என்பதை புரிந்துகொண்ட பிரதமர் மோடி, நவம்பர் 18ஆம் தேதி மாநிலங்களவையில் சரத்பவாரை புகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி மோடியும் பவாரும் சந்தித்த நிகழ்வு அரங்கேறியது. இருவரும் 40 நிமிடங்கள் பேசினர். அடுத்தடுத்து நடந்த இந்த இரு நிகழ்வுகளாலும் இருவரிடையே நெருக்கம் அதிகரித்துவிட்டதாகவும் பாஜகவுடன் கூட்டணி சேர பவார் தயாராகிவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது.

ஆனால், அரசியல் முதிர்ச்சிப்பெற்ற பவார், பாஜகவின் இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கெல்லாம் மயங்கி சமாதானமாகிவிடுவார் என்று எதிர்பார்க்க முடியுமா? பாஜக எதிர்ப்பு என்ற தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதனாலேயே, தன் கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே தம் மீதான அபரிமித நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தார். எனவேதான் பாஜகவுடன் கூட்டணி வைக்க, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த அஜித் பவாரின் முயற்சியை தோல்வியடையவும் செய்தார்.

அஜித் பவாரின் அதிருப்திக்கு காரணம், பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்சியின் செயல்தலைவரானதும் அவரின் கீழ் பணியாற்ற விரும்பாததுமே எனக் கூறப்பட்டது. அதனாலேயே, தமது ஆதரவாளர்கள் தம் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கையில் நவம்பர் 23ஆம் தேதி கட்சிக்குள் கலகமூட்ட அஜித் பவார் முயற்சித்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. கட்சியில் பிளவு ஏற்படுவதை விரும்பாமல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.கூட தம் பின்வராத நிலையில், அஜித் பவார் மீண்டும் சொந்தக் கட்சிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வளவு கலகம் விளைவித்தபோதும், அஜித்பவாரின் முக்கியத்துவத்தை உணர்ந்த பவார், கட்சியின் நலனுக்காக தொலைநோக்குப் பார்வையுடன், அவரை மன்னித்துவிட்டார். என்னதான் கலகம் செய்தாலும், கட்சியை வழி நடத்த தனது மகள் சுப்ரியாவை விட, அண்ணன் மகன் அஜித் பவாரே மேலானவர் என்றும் பவார் நினைக்கிறார். எனவே அஜித் பவார் மீண்டும் கட்சிக்குத் திரும்பிய நிலையில், இப்போது சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசை ஸ்திரப்படுத்துவதில் மெனக்கெட ஆரம்பித்துள்ளார்.

பாஜகவுக்கு தொந்தரவு கொடுப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைவிட சிவசேனாவுக்கு கைவந்த கலை என்பதை நன்கறிந்தவர் பவார். இதனால் மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல், மாநில பாஜகவினரின் தொந்தரவுகளை, சிவசேனாவே சமாளிக்கட்டும். அப்படி முடியாவிட்டால் 'கை' கொடுப்போம் என்ற முடிவுக்கு வந்த பவார், பாஜகவை வஞ்சம் தீர்ப்பதில் கவனம் செலுத்த முடிவெடுத்துவிட்டார்.

அதன்படி, அமித் ஷா மீதான கொலை வழக்கை விசாரித்த நீதிபதி லோதா, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தது தொடர்பான விசாரணையை மீண்டும் தூசிதட்ட அக்கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, பாஜக ஆட்சியில் மகாராஷ்டிரா காவல் துறை தொடர்ந்த பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், பட்டியலின ஆதரவாளர்கள் எனப் பலர் மீது வழக்கு பாய்ந்தது.

இதனை பொய் வழக்காகப் பலரும் கருதினர். இந்த வழக்கிலும் முக்கிய முடிவெடுக்கப்படும் என்றே தெரிகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பாஜகவின் தொல்லை அதிகரித்ததால், பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை கைவிடும் திட்டமும் அக்கூட்டணி அரசுக்கு உள்ளதாம்.

பவாரின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் யூகித்துவிட முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட முதிர்ந்த அனுபவம் பெற்றவர். முயலோடு கூடவே ஓடுவது போல் பாவலா காட்டி, அதனை வேட்டையாடுவது என்பதுபோல கில்லாடியான பவார், அடுத்தகட்ட முடிவெடுப்பதில் அவசரம் காட்டமாட்டார்.

எனவே, தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை குறித்து முடிவெடுத்த பின், அவரது அடுத்த ஆட்டம் பாஜகவுடன் பேரம் பேசுவதில் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிவசேனா கூட்டணி ஆட்சியில், துணை முதலமைச்சர் பதவி, 16 அமைச்சர்கள் என சுகபோகமாக தேசியவாத காங்கிரஸ் நீடிக்கும் என்றே தெரிகிறது.

தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் ஆட்டத்தில் அதிக பலனடைந்ததும் தேசியவாத காங்கிரஸ் என்றே நடுநிலையான விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். அதேபோன்று முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் நிறைய இழப்புகள் சிவசேனாவுக்குத்தான் என்றும் கூறுகின்றனர்.

தனது பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி வைத்ததால், அந்த இரு கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகளும் பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் இப்போது பாஜக மட்டுமே இந்துத்துவ அடையாளம் கொண்ட கட்சி என்ற நிலையும் உருவாகிவிட்டதால், 8 முதல் 10 விழுக்காடு உள்ள தீவிர இந்துத்துவ ஆதரவு வாக்குகளும் அக்கட்சிக்கே கிடைக்கும்.

இதனால் சிவசேனா நிலை என்னாகும் என்பதுதான் இப்போதைய கேள்வி. வாக்கு வங்கி பலத்தை இழந்துவிட்ட சிவசேனாவுடன் அடுத்து வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை தொகுதி பங்கீடு செய்து கொள்ளுமா? என்ற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. இதற்கான விடை, ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின்போதே தெரிந்துவிடும்.

மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோல்வி!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்குப் பின், முதலமைச்சர் பதவிப் போட்டியில் இந்துத்துவ கொள்கை உடைய கட்சிகளான பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் வெடித்தபோது, ஒரு கட்டத்தில் சமாதான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இறங்கியது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்த நெருக்கடியால், இரண்டரை ஆண்டுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என முரண்டுபிடிப்பதை கைவிட சம்மதித்த சிவசேனா, அதற்காக தாம் முன்வைக்கும் இரு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றது. அவை:

1. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வராக்க வேண்டும்.

2. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்.

சிவசேனாவின் இந்த இரு நிபந்தனைகளை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார். ஏனெனில் நிதின் கட்கரி மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களில் முக்கியமானவராக உள்ளார் என்றும் பாஜகவை (105) விட பாதி இடங்களில் வென்ற சிவசேனாவுக்கு (56) முக்கியத்துவம் கொடுத்தால் மோசமான முன்னுதாரணமாகிவிடும்.

மேலும் சிவசேனாவும் தமக்கு பெரும் வெற்றி கிட்டிவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் எனப் பிரதமர் மோடி வாதம் செய்துள்ளார். இப்படி ஒரு சமாதான உடன்பாட்டிக்கு இரு கட்சிகளுமே வர மறுத்ததால், சமரச முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ். கைவிட்டுவிட்டது.

Intro:Body:

Heading: The transformation of BJP: from an ideologically assertive

party to power-hungry party.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.